10ஆம் வகுப்பு ரிசல்ட்-காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் "ஆப்சென்ட்"
10 - ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் "ஆப்சென்ட்" அளிக்க வேண்டுமென பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்கள், மரணம் அடைந்த மாணவர்கள் பட்டியலை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதேநேரம், கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி தேர்வுத் துறை இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட ஓர் அறிக்கையில், மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தமிழக தேர்வுத்துறை, புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
10ஆம் வகுப்பு ரிசல்ட்-காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் "ஆப்சென்ட்" #10thExam | #10thExamResult https://t.co/bApOzFWMOJ
— Polimer News (@polimernews) July 5, 2020
Comments